கல்முனை மாநகர சபையின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

கல்முனை மாநகர சபையினால் ஐந்து மில்லியன் ரூபா இன்று (12.02.2013)  மக்கள் வங்கியின் நிலையான வைப்பில் வைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பற்றுச்சீட்டு மக்கள் வங்கியின் முகாமையாளர் எம்.ஹனீபாவினால் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் கையளிக்கப்பட்டது.

முதல்வரின் அயராத முயட்சியின் பயனாகவும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீனின் செயற்திறமையினாலும் அண்மைக் காலமாக கல்முனை மாநகர சபையின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் காலப்பகுதியில் இன்றுவரை  20 மில்லியன் ரூபா மக்கள் வங்கியின் நிலையான வைப்பில் இடப்பட்டுள்ளது.

இதனூடாக மாநகர சபையின் நிதி உறுதித்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

BY: FM. Farhan
BY: FM. Farhan

Published by

Leave a comment