
FM. பர்ஹான்
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 21 பாடசாலை மாணவிகள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் ஸ்தலத்திற்கு வருகை தந்து கருத்துத் தெரிவிக்கையில் ..
(முந்திய செய்தி)
உணவு நஞ்சானதில் 20ற்கும் மேற்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்திசாலையில் அனுமதி
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் உட்கொண்ட காலை உணவு நஞ்சானதில் சுமார் 20ற்கும் மேற்பட்ட மாணவிகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை உட்கொண்ட உணவு நஞ்சானதில் மயக்கமுற்றும் வாந்தி எடுத்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பான பரிசோதனைகளை காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி தள வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எம்.ஆதில் தெரிவித்தார்.
இதேவேளை இது சம்பந்தமாக பரிசீலிப்டபதற்காக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நசிர்தீன் தலைமையிலான குழுவும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.

குறித்த மாணவிகளில் அதிகமானவர்கள் காத்தான்குடி சித்தீக்கிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையிலான குழுவினரும் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(பிந்திய செய்தி)
காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அறபுக்கல்லூரியைச் சேர்ந்த குறித்த மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையா?இல்லையா? தொடர்பில் இப்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது எனவும் அதை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளில் சிலருக்கு ஏலவே அஸ்மா உள்ளிட்ட நோய்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் தற்போது எந்தவித ஆபத்தான நிலையிலுமில்லை எனவும் மட்டக்களப்பு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம்.பய்லுர் றஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த மாணவிகளின் நிலைமைகளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீட உறுப்பினர் மர்சூக் அஹமட் லெப்பை, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஹாறூன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டும் கேட்டும் அறிந்து கொண்டனர்.
கடந்த வருடமும் காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அறபுக்கல்லூரியைச் சேர்ந்த 96 மாணவிகள், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் உணவு நஞ்சானதில் சுகயீனமுற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Leave a comment