மாணவர்களின் நன்மைகருதி ‘அத்யாபன 2013’ கண்காட்சி

Exhibitions-LOGO[1]கல்வி என்பது ஒரு இளைஞன், ஒரு நாடு மற்றும் ஒரு பரம்பரையின் ஒட்டு மொத்த எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக உள்ளது. தனி மனிதனையோ அல்லது சமூகத்தையோ இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியானது வெற்றிப் பாதைக்கு வழி வகுக்கும் காரணியாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மையை கல்வி முக்கியம் என கருதுகின்ற ஒவ்வொரு இலங்கைக்குடி மகனின் மனதிலும் ஆழமாக பதிந்து உள்ளது.

வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் சக்தி கல்வியிடம் உண்டு. வெற்றிக்கான நுழைவுச்சீட்டை”Passport to Your Future” உங்களுக்கு அளிக்கும் உயர் கல்வி மற்றும் தொழில் சார் கல்வி தொடர்பான கண்காட்சி “அத்யாபன 2013” இவ் அக்டோபர் மாதம் BMICH மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியானது தொடர்ந்து 8வது தடவையாக அக்டோபர் 4, 5 மற்றும் 6ம் திகதி BMICH இல் இடம்பெறும்.

இக் கண்காட்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி தொடர்பான தெளிவான சிந்தனையை மாணவர்களுக்கு விதைக்கும் நோக்குடனும் தன் கல்விக்கான பாதையை சரியாக அமைத்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நிகழ்வாகவும் அமையும்.

“அத்யாபன 2013” கண்காட்சி இனிவரும் நாட்களில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலே நடைபெற இருக்கிறது. மட்டக்களப்பு கண்காட்சியானது கொழும்பு கண்காட்சியின் பின் அக்டோபர் மாதம் 11, 12 மற்றும் 13 திகதிகளிலும் யாழ்ப்பாண கண்காட்சியானது 2014ம் ஆண்டின் தொடக்கத்திலும் நடைபெறவுள்ளது.

கடந்த காலங்களில் கல்வி பற்றிய தேடலை மேற்கொள்ள உதவும்மைய களமாக “அத்யாபன 2013” அமைந்திருக்கின்றது. கல்வி தொடர்பான போட்டித்தன்மை காரணமாகவும், விஸ்தரிக்கப்பட்ட பரந்த தெரிவுகள் காரணமாகவும் பல மாணவர்கள் இக் கண்காட்சிக்கு வருகை தந்து அவர்களின் இலக்கினை எட்டியிருக்கின்றார்கள்.

கண்காட்சியில் கலந்து கொள்ளும் அனைத்து நிறுவனங்களுக்கும் தங்கள் சேவையினை மாலைதீவின் கண்காட்சியான ”Youth Vision Maldives 2013” இலும் பங்குபற்ற சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

இக் கண்காட்சியானது உடனடியாக உயர் தர பரீட்சையின் பின் இடம்பெறுவதால் மாணவர்கள் தம் கல்வி தொடர்பான வாய்ப்புகளை தேட உதவி புரிகிறது.

ஜனாதிபதி விருது வென்ற Lanka Exhibition and Conference Service இனால் ஒழுங்கமைக்கப்படும் இந்நிகழ்வானது பெரும்பான்மையான மாணவ சமுதாயத்தை ஈர்க்கின்றது என்பதில் ஐயமில்லை.

இக் கண்காட்சியின் நிர்வாக குழு தலைவர் இம்ரான் ஹசன் கருத்துத் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் பங்குபற்றும் கண்காட்சியாக “அத்யாபன 2013” திகழ்கிறது.

எமது கண்காட்சி மட்டுமே யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலே நடைபெறுகின்ற ஒரேயொரு கண்காட்சியாக காணப்படுகிறது. இப்பிரதேசங்களிலும் கல்விக்கா கேள்வி அதிகமாக காணப்படுகிறது. இதுவரை காலமும் எம் கண்காட்சியானது புகழ்பெற்ற ஒரு முகப்படுத்தப்பட்ட கல்வி சார் கண்காட்சியாக இருக்கிறது. இனிமேலும் இருக்கும்” என்றார்.

தொடர்ந்தும் நான்காவது தடவையாக இக்கண்காட்சியின் பங்குதாரர்களாக இருக்கும் மற்றும் புகழ் பெற்ற அவுஸ்திரேலிய கல்வி வழங்குனர்களான Austrade நிறுவனமானது கருத்துத் தெரிவிக்கையில், “அத்யாபன கண்காட்சியானது அவுஸ்திரேலிய கல்வி வாய்ப்புக்களை பகிரும் சிறந்த சந்தர்ப்பம்” என கூறினர்.

Austrade ஊடக தொடர்பாளர் நபரான டேவிட் சாமுவேல் கருதுத் தெரிவிக்கையில் திustraனீலீ நிறுவனமானது ஆஸ்திரேலிய கல்வி வழங்குனர்களின் கல்வித் திறமையை, இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தெரிவிப்பதை மிகவும் விரும்புகிறது. Austrade ஆனது கடந்து மூன்று வருடம் LECS நிறுவனத்துடன் இணைந்து பணி புரிவது அவுஸ்திரேலியாவினை கல்வி கற்கும் சிறந்த மையமாக தரம் உயர்த்தவே” என்றார்.

இலங்கையினுள் குறைவாக இருக்கும் பல்கலைக்கழக வாய்ப்புக்களினால் வளர்ந்து வரும் இலங்கை மாணவச் சமுதாயத்தினர் தங்கள் கல்வி கற்கும் விருப்பத்தினை நாட்டின் எல்லைகளை கடந்தும் ஆர்வமாக உள்ளனர். இதனால் கேள்விகள் பலவாக அதிகரிக்கின்றன. ஆகவே தான் இக்கண்காட்சி மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் போன்றோரின் தத்தமது இலக்குகளை அடைய பயனளிக்கும் சிறந்த வாய்ப்பாக உள்ளது.

பலதரப்பட்ட தேர்வுகளில் சிறந்த எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு அத்யாபன கண்காட்சி மக்களின் நன் மதிப்பை ஈட்ட கூடிய சதவீதத்திலான மக்கள் பார்வையிடும் நிகழ்வாக மாறியுள்ளது.

மூன்று நாள் கண்காட்சியான இது குறிப்பிடப்பட்ட அரங்குகளில் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கான சிறப்பு கூட்டங்களையும், உயர் கல்வி சார் வல்லுநர்களையும் எதிர்கால வாழ்க்கை தொடர்பான உரைகளையும் கொண்டிருக்கும்.

வளரும் மாணவ சமுதாயத்தை கருத்திற்கொண்டு அவர் தம் கவனத்தினை ஈர்க்கும் முகமாக சில நிகழ்வுகளும் பார்வையாளர்களுக்கு நன்மை பயக்கும் கண்காட்சியாகவும் இம் மூன்று நாட்களும் அமையும்.

-தினகரன்

Published by

Leave a comment