
கடந்த மாதத்தின் கறுப்பு துளி..
எல்லோர் காதுகளுக்கும்
ஏற்கமுடியா ஓர் செய்தி.
கொல்லப்பட்டு விட்டாள் றிஸானா.
இல்லை
உன்னை கொன்று விட்டனர்..
எத்தனை வருடங்கள்
நீ வருவாய் என்று
தவமிருந்தோம்..
அந்த நாளை
என்னிக்கொண்டிருந்தோம்
நாங்கள்..-
நாளை இ நாளை மறுநாள்
இல்லை அடுத்த மாதம்.
ஆனால் நீயோ
எங்களை விட்டு
சென்றுவிட்டாய் நிரந்தரமாக…..
உனது நாடு
கவலையில் ஆழ்கிறது
எல்லோர் கைகளும்
மேலெழுகிறது உனக்காக…
உன் தாய் தந்தையின் அழுகுரல்
ஊர் முழுக்கக் கேட்கிறதாம்
எனக்கும் கேட்கிறது……
இப்படியொரு நாளை
இனிமேலும் சந்திக்க
நாம் தயாரில்லை…
கற்கும் வயதில்
கர்ப்பினி கூடச்
செய்யாத வேலை
நீ செய்த சேவை….
நீ பாலூட்டவில்லை
உன்னைப் பாலூட்ட
வைத்துவிட்டார்கள்..
அவர்களுக்குத் தெரியுமா?
உனக்கும் குழந்தை
வயதுதான் என்று…..
எத்தனையோ பெண்கள்
தினம் கொல்லப்படுகின்றனர்
உலகில் – உன்னால் மாத்திரம்
எத்துனை எத்துனை
விமர்சனங்கள் விரசல்கள்..
நீ இழைத்த குற்றத்தை
ஓர் மேற்குலகப் பெண்
இழைத்திருந்தாள்??
ஏன்ன செய்ய..
ஏழையாகப் பிறந்தது
உன் குற்றமா??
பல மாற்றங்கள்
உனது நாட்டில்..
உன் கூரை வீடு
இன்னும் அப்படியே!!
இராக் கனவு போல…
இப்போது முன்வருகிறது
பண மோகச் சமுகம்…
உன் தண்டனைதான்
இவர்களது பணப் பொட்டலங்கள்…
துறக்க வைத்ததோ??
உலகின் கோடீஸ்வரர்கள்
போதும்!
வறுமையை ஒழிக்க…
இன்னும் பல றிஸானாக்கள்
எங்களுக்கு மத்தியில்
உன் பாடத்திட்டந்தான்
அவர்களை மாற்ற வேண்டும்..
1400 வருடங்களுக்கு முன்பு
இரக்கம் ஊற்றெடுத்த தே
அங்குதான் – அதனாலோ என்னவோ
உன்னை மன்னிக்க
இரக்கத்தை விற்கவும்
தயாரில்லை அவர்கள்….
இப்போது அப்பிரதேசம்
எல்லோர் மனதிலும்
எச்சரிக்கை..!
இது அபாயம்
எனும் மணியோசையாக…
உன்னைப் படைத்த
இறைவனுக்கும் உனக்கு மே
உண்மை தெறியும்….
பக்கத்து வீட்டுக்குக் கூட
பயந்துதான் செல்லுவாய்
நீ எப்படி ????
அனைவருக்கும் உன் மீது
பரிதாபமே!!
நீயும் உலகில்
இப்போது பிரபல்யம்…
உன் மரணம்
இங்கு எழுதப்பட்டிருக்கலாம்
கண் காணா தேசத்தில்
கழுத்துக் கொய்யப்பட்டதை விட……
உன்னைப் பற்றிப்
பேசும் போதெல்லாம்
கண்ணீர் வந்துவிடுகிறது.
எனக்கே இப்படியென்றால்
உனது குடும்பம்..!
நீ கொலை செய்யப்பட்டது
அநீதி என்றால்
நீ தியும் உன்னோடே
மரணித்துவிட்டது..
உன்னைக் கொன்றது
நியாயம்..
எனக் கூறும் அறியா
மடையர்களும் நம்மத்தியில்..
இவர்களெல்லாம் யார் உனக்கு..??
இந்தச் சமுகம்தான் – உன்னை
கோலைகாரியாக ஆக்கியது
எனவே தண்டனைக்குச்
சொந்தம் இவர்கள்தாம்…
உன் பச்சை மனசு
ஒரு பிஞ்சைக் கொல்லுமா..??
என்ற சந்தேகமே
எல்லோருக்கும்..
நீயும் ஒரு குழந்தை தானே
நீயா கொலை செய்தாய்??
இல்லை அவர்கள் உன்னைக்
கொன்றுவிட்டனர்…
எல்லாமறிந்தவன்
அல்லாஹ் மாத்திரமே!
என் பிராத்தனைகளும்
உனக்காய்…
விடுதலை எனும் உன் நம்பிக்கை
உனக்கு கிடைத்துவிட்டது
சுவர்கத்தில்…….
சகோ. ஷகீப் அர்ஸலான்
காத்தான்குடி
Leave a comment