கொள்வனவு செய்யப்பட்ட பானம் காலாவதியானவை என கண்டுபிடிப்பு

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மில்லத் மகளிர் வித்தியாலய மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு வைத்து அருந்துவதற்கென கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட (Mango Juice) ‘மெங்கோ பானம்’  காலாவதியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம்.நசிர்தீன் தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட போதே காலாவதியானவை என கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த பானம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் கேட்ட போது சம்பவம் நடந்தது போது அவரது தம்பி கடையில் இருந்ததாகவும் காலாவதியான பொருட்களை திருப்பி அனுப்புவதற்காக வைக்கப்பட்ட பானத்தை தவறுதலாக வழங்கியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்ததாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment