கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மியினால் பிரதேச மக்களுக்கு மரங்கள் கையளிப்பு

BY: VM. Razee
BY: VM. Razee

– V.முகம்மட் ராஸி

கிண்ணியா நகரத்தை எளில் கொஞ்சும் பசுமையாக வைத்திருப்போம் எனும் கருத்திட்டத்தில் இன்று நகரசபை நகரபிதா தேபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்டடத்தரணி தலைமையில் நகரசபை முன்றலில் வைத்து பொதுமக்களிடம் மரக்கன்றுகள் கையளிக்கப்பட்டது.

புதுவருட ஒன்றுகூடலின் போது வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியிடம்  நகரபிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிண்ணியா நகரத்தை பசுமைப்புரட்சியின் கீழ் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்திற்கமைய கிண்ணியா நகரத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிண்ணியா புஹாரியடி சந்தி ‘ரௌன்ட போட்’ அழகுபடுத்தும் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பலா, கருங்காலி, திருக்கொண்டல், பஞ்சு, சமுலை, இலுப்பை, புலியை, முதுரை, மஹக்கொனி ஆகிய  மரக்கன்றுகள் இன்று நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணியினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

BY: VM. Razee
BY: VM. Razee

கிண்ணியா பிரதேசத்தில் காணப்படும் சகல பள்ளிவாயல்களிலும் அறிவித்தல் மூலமாக மக்களை வரவழைத்து இம்மரக்கன்றுகள் இன்று வழங்கப்பட்டது. நிகழ்வின் போது நகரபிதா தேபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்டடத்தரணி, இதுபோன்ற மரக்கன்றுகள் தொடர்ந்தும் வழங்கபடும் கிண்ணியா நகரத்தை எளில் கொஞ்சும் பசுமையாக்கும் திட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு எனக்கு மிகமிக தேவையாக உள்ளது.

Your Kattankudy
Your Kattankudy

கிண்ணியா பிரதேச வீதியோரங்கள், காணி கனிசமாகவுள்ள பொது இடங்கள், கிராமப்புறங்கள் என சகல பிரதேசத்தையும் பசுமையாக்க இனிவரும்காலங்களில் இவ்வாரான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோமென தெரிவித்தார். இந்நிகழ்விற்கு கிண்ணியா தளவைத்தியசாலை DMO டொக்டர் சமீம் மற்றும் நகரசபை ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர்.

Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy

Published by

Leave a comment