காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் 20 வது வருட 78 மாணவர்கள் வெளியாகும் மாபெரும் விழா ஏதிர்வரும் 22 திகதி

BY: FM. Farhan
BY: FM. Farhan

– பழுலுல்லாஹ் பர்ஹான்

22-02-2013 வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மத்ரஸா அதிபர் எம்.எஸ்.எம். அஸார் மௌலவி தலைமையில் இடம்பெறவுள்ளது.

 இந்நிகழ்வில் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளாக இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ. கபூர் மதனி, குர் ஆன் மத்தரசாக்கள் அபிவிருத்தி சபையின் முன்னாள் பரீட்சை பரிசோதகர் எம்.ஐ. ஆதம் லெப்வை (பலாஹி) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 இது வரை 1352 மாணவர்களை சான்றிதழ் பெற்று வெளியாக்கிய இம் மத்ரஸாவின் மாபெரும் விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

 78 மாணவர்கள்  வெளியாகும் இம் மாபெரும் விழாவில் இஸ்லாமிய கலை கலாசாரத்தை பிரதிபளிக்கும் மாணவர்களிகன் இனிமையான நிகழ்வுகள், அல்குர்ஆன் பற்றிய சிறப்புரை, மர்ஹூம்களை நினைவு கூறும் விஸேட வைபவம், ஊர்பிரமுகர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், விழாவுக்கு உதவியவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அதி உயர் கௌரவ விருது வழங்கள், 78 மாணவர்கள் கௌரவித்து வெளியாக்குதல், மத்ரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல், அல்குர்ஆன் சிறப்புப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தராதரப்பத்திரம் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு இடம்பெறவுள்ளதாக மத்ரஸா அதிபர் எம்.எஸ்.எம்.அஸார் மௌலவி தெரிவித்தார்.

BY: FM. Farhan
BY: FM. Farhan

Published by

Leave a comment