ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி சஞ்சிகை திரையிட்டு வெளியீட்டு விழா நாளை காத்தான்குடியில்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

காத்தான்குடி நகர சபை மற்றும் பிரதேச கலாசார நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் தேசிய தொலைக்காட்சி ஊடகங்களின் ஊடகவியலாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி சஞ்சிகை திரையிட்டு வெளியீடும், மாபெரும் கலை நிகழ்வும் நாளை செய்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கா-குடி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஜெ. ஜவாஹிர் மதனி தலைமையில் இடம்பெறவுள்ளது.

 இந்நிகழ்வில் பிரதம மற்றும் கௌரவ, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் ,தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீ.ல.மு.கா. தவிசாளரும், உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சருமான பஸீர் சேகுதாவூத், மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் ஹாபிஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், மட்டு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரன், கா-குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், கா-குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், கா-குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர-நகர முதல்வர்கள் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

BY: FM. Farhan
BY: FM. Farhan

 இங்கு வெளிடப்படவுள்ள படைப்பு, காணொளி சஞ்சிகை திரையிட்டு நிகழ்வில் உலகில் இடம்பெற்ற சாதனைப்பதிவுகள், நம்ப முடியாத திகைப்பூட்டும் காட்சிகள், அலர வைத்த அனர்த்தங்கள், கண்கலங்க வைக்கும் பேசும் படங்கள், குழந்தைகளை குஸிப்படுத்தும் குதூகலக் காட்சிகள், கா-குடி ஊர் கலைஞர்களின் பல்குரல் நிகழ்வுகள், செரண்டிப் முஸ்தபா குழுவின் நகைச் சுவை, ரம்பரே ரம்பா புகழ் அஸீஸ் மாமாவின் பாடல்களும், கலைஞர் கே.எம்.அலீமின் ஓரங்க நாடகம் உட்பட இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy

Published by

One response to “ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜி தொகுத்த, படைப்பு, காணொளி சஞ்சிகை திரையிட்டு வெளியீட்டு விழா நாளை காத்தான்குடியில்”

  1. நிகழ்வுகள் சிறப்புடன் வெற்றிபெற வாழ்த்துக்கள்
    மதியன்பன்

Leave a comment