மட்டு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் – மட்டக்களப்பு நொச்சிமுனையில்

BY FM. FARHAN
BY FM. FARHAN

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்டநொச்சிமுனை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசாதாரண சூழ்நிலைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள், பொலிஸார், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு தெளிவு படுத்தும் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு நொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

கல்விசார் பிரச்சினைகள், எவ்வித காரணமுமின்றி மாணவர்களை பாடசாலையிருந்து நீக்கல், உணவுப் பிரச்சினைகள்,போதிய பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாம் எதிர்நோக்கி வருவதாகவும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் எவ்வித அசமந்தப்போக்கில் உள்ளதாகவும் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாம் படிப்பதற்கான கல்வி சார் நடவடிக்கைகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெறவேண்டும்,  மாணவர்கள் எவ்வித பிரச்சினைகளையும் எதிர்நோக்கக்கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இங்கு இடம்பெற்ற இக் கூட்டத்தில் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள், காத்தான்குடி பொலிசார், சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள், பொது அமைப்புக்களிகளின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் , ஊர் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதற்கமைவாக இது தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கூட்டம் நாளை மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலாளர் கிரிதரன் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment