மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்.

BY FM. FARHAN
BY FM. FARHAN

பழுளுல்லாஹ் பர்ஹான்

புதிய காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் 2013ம் ஆண்டில் இணைந்து கொண்ட புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும், கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) தலைமையில் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வைத்தியர் எம்.ஏ. அலீமா அப்துர் றஹ்மான் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர்களும் கௌரவ அதிதிகளாக பெண் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாம் அமர்வுக்கு கல்லூரியின் உப அதிபர் ஜனாபா ஏ. எல். சில்மியா தாரிக் தலைமை தாங்கியதுடன் அதில் கல்லூரி மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இரண்டாம் அமர்வில், கடந்தவருடம் 2012ல் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க். ஏ.எல். முஜாஹித் ஸலபியால் பாராட்டுரையும் இடம் பெற்றது.

இக்கல்லூரியில் முதலாம் வருடத்தில் 40 மாணவிகளும் இரண்டாம் வருடத்தில் 45 மாணவிகளும் மூன்றாம் வருடத்தில் 32 மாணவிகளும் மார்க்கக் கல்வியைக் கற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment