கடந்த வருடம் 6,18,053 சாரதி அடையாள அட்டைகள் வினியோகம்!

imagesCA51NP4Lபோக்குவரத்துத் திணைக்களம் கடந்த வருடத்தில் மாத்திரம் 6,18,053 சாரதி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்கா தெரிவிக்கிறார்.

கடந்த வருடம் 3,47,959 புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், புதிதுபடுத்தப்பட்ட 2,31,465 அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன எனக் குறிப்பிடுகிறார்.

தினந்தோறும் ஒரு நாளைக்கு 3150 சாரதி அடையாள அட்டைகளை வழங்கி வருவதாகவும் போக்குவரத்துப் பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்கா குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும், சாரதி அடையாள அட்டை வழங்குவதில் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படும் குளறுபடிகள் பற்றியும், சாரதிகளைப் பயிற்றுவிக்கும் பாடசாலைகளினால் ஏற்படும் குளறுபடிகள் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment