
பழுளுல்லாஹ் பர்ஹான்
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருவேறுபட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நேற்று (09.02.2013) ஆரம்பித்து வைத்த்தார்.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்திற்கான மலசல கூடம், உடையார் வீதிக்கான வடிகான் என்பன அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை அடிக்கல் நட்டி முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.
சந்தாங்கேணி மைதானத்தில் மலசல கூடம் இன்மையினால் விளையாட்டு வீரர்கள் பெரும் அசௌகரிகங்களுக்கு உள்ளாவதனை விளையாட்டு கழகங்களும் கடந்த அடை மழையின்போது குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டதை நேரில் முதல்வர் சென்று பார்வையிட்டபோது மக்களினாலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து மலசல கூடம் அமைத்தல் மாநகர நிதி ஒதுக்கீட்டிலிருந்தும், வடிகான் அமைத்தல் ஆசிய மன்றத்தின் நிதியில் இருந்தும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Leave a comment