மாபெரும் இளைஞர் விழிப்புணர்வு மாநாடு நாளை காத்தான்குடி கடற்கரையில்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

காத்தான்குடி தாறுல் அதர்அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் மாபெரும் இளைஞர் விழிப்புணர்வு மாநாடு நாளை 08.02.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் அன்வர் பள்ளிக்கு முன்பாக தாறுல் அதர்அத்தஅவிய்யா பிரச்சாரகர் பீ.எம்.அஸ்பர் (பலாஹி) தலைமையில் இடம்பெறவுள்ளதாக தாறுல் அதர்அத்தஅவிய்யாவின் ஊடக இணைப்பாளர் நஜீம் தெரிவித்தார்.

மாலை 05 மணியிலிருந்து இரவு 09 மணி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ‘சமகால இளைஞர்களின் நோக்கும்! போக்கும்!’ எனும் தலைப்பில் மௌலவி ஹாறூன் (ஸஹ்வியும்), ‘காதலர் தினம் ஓர் இஸ்லாமியப் பார்வை!’ எனும் தலைப்பில் தேசியப் பேச்சாளர் மௌலவி அப்துல் ஹமீட்(ஸரயியும்) சொற்பொழிவாற்றவுள்ளனர்.

ஏதிர்வரும் 14ம் திகதி காதலர் தினம் எதிர்நோக்க இருப்பதால் அது தொடர்பான பூரண தெளிவு எமது இளைஞர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற பிரதான நோக்கில் நடாத்தப்படும் இம்மாநாடு நேரடியாக www.zajilnews.lk எனும் இணையத்தளத்தில் நேரடி அஞ்சலி செய்யப்படவுள்து.

குறித்த தாறுல் அதர் அத்தஅவிய்யா பல்வேறு சமூக சேவைகளையும் சமகாலப்பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment