ஓட்டமாவடி றினாஸ் முஹம்மட் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா

ஏ.எல்.எம்.தாஹிர்

ஓட்டமாவடி றினாஸ் முஹம்மட் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நாளை (08.02.2013) 4.30 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இளந்தளிர் வெளியீட்டகத்தினால் பதிப்பிக்கப்;பட்டுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் சிறப்பு அதிதியாக ஓட்டமாவடி அறபாத், விசேட பேச்சாளர்களாக எம்.ரீ.றிஸ்வி (மஜிதி), அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜூனைதீன் (நளீமி), ஆகியோர் உட்பட மேலும் பல அறிஞர்கள் எழுத்தாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்த இந்நூல் ஆசிரியர் தற்போது ஜாமியா நழீமியா கலாபீடத்தின் ஐந்தாம் வருட மாணவராவார்.

அத்துடன் ‘களம்புதிது’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவிருந்து கலை இலக்கிய பணியாற்றிவரும் இவர், எழுத்துத் துறையில் மாத்திரமன்றி மார்க்க அழைப்புப் பணியிலும் அளப்பரிய பங்காற்றி வருகிறார்.

Published by

Leave a comment