-MJ

பிரித்தானியா முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு ஹலால் உணவு எனும் உணவுப் பரிமாற்றத்தில் பன்றி இறைச்சி விநியோகிக்கப்பட்டமை (DNA) உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய நீதி அமைச்சு குறித்த உணவு வழங்கும் நிறுவனத்தை இடைநிறுத்தி இருக்கின்றது.
இதன்படி, முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு தனியாக ஹலால் உணவுகளை சமைத்து விநியோகிக்கும் நிறுவனத்தை பல வருடமாக அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது.
‘பன்றி இறைச்சி முஸ்லிம்களுக்கு கட்டாயமாகத் தடை செய்யப்பட்ட உணவாகும். எந்த வகையிலும் இம்மாற்று விநியோகத்தை ஏற்க முடியாது. மன்னிக்கவும் முடியாதவை’ என நீதியமைச்சர் ஜெரிமி ரைட் கண்டித்திருக்கின்றார்.
சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் பரிசோதணை நிறுவனம் (FSA) திடீரென நடாத்திய சோதணையில் இவ் உணவுப் பண்டங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், ஹலால் முத்திரை அடிக்கப்பட்ட இறைச்சிக் பொதிகளை பரிசோதிக்கும் போது அவை பன்றி இறைச்சி என்பது தெரிய வந்ததாகவும் இச்சோதனை நிறுவனத்தின் அதிகாரி ஸ்டீவ் வேர்ன் தெரிவித்தார்.
இதன் பின்னர் வழங்கப்பட்டிருந்த சகல உணவுகளும் வாபஸ் பெறப்பட்டதுடன் உணவு வழங்கும் குறித்த நிறுவனத்தின் ஒப்பந்தமும் நீதியமைச்சால் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.
மனித உரிமைக்கும் அவர்களுக்கான சமய விடயங்களுக்கும் மதிப்பளிக்கும் உலக நாடுகளில் பிரிட்டனும் உள்ளடங்குகின்றன. அவர்களின் நேர்மையான இந்நடவடிக்கையின் பின்னர் இஸ்லாமிய அமைப்புக்கள் நீதியமைச்சுக்கு நன்றிகளைத் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment