– சுபானி ரிபாயி

சுன்னத் வல் ஜமாஅத் குறிக்கோளை நோக்கிய ஓர் பயணத்தில்….. அதிசங்கைகுரிய ஷெய்கு நாயகம் கலாநிதி மௌலவீ.ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி (தால உம்றுஹு) அவர்களின் பிறந்த தினம் மிகவும் விமர்சையாக காதிரிய்யாஹ் திருச்சபை றாத்திப் மஜ்லிஸுடன் சேர்த்து இலங்கையில் காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயலில் 05-02.2012 செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி சரியாக இரவு 8.00 மணிக்கு கொண்டாடப்பட்டது.
இலங்கையின் பல பாகங்களிலும், மற்றும் வெளிநாடுகளில் வாழும் முரீத்தீன்களும், முஹிப்பீன்களும் தங்களது நாயகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மனமுவந்து வழங்கினர். அது மாத்திரமல்லாது உள்ளுர் மற்றும் வெளியூர் சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை மின்னூடகம், குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசியூடாகவும் தெரிவித்தனர்.
இவ்விசேட நிகழ்ச்சியில் செய்கு நாயகத்தை ஆரத்தழுவி வாழ்த்துக் கூறியதுடன் செய்கு நாயகத்திடமிருந்து அருளையும் பறக்கத்தையும் நீண்ட நேரம் காத்திருந்து முரீத்தீன்களும், முஹிப்பீன்களும் பெற்றுக் கொண்டனர்.
இது செய்கு நாயகத்தின் 69வது பிறந்ததினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment