குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த 8ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு தொடர் நிகழ்ச்சிகள்!
– கலீல் பாகவி
BY: Kaleel Baagawi
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 8 வருடங்களாககுவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு,
குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், இவ்வருடம் (2013) ஜனவரி மாத இறுதியில் (2012) 23ந் தேதி முதல் 27ந் தேதி வரை 8ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஐந்து நாட்கள் பல்வேறு தலைப்புகளில் நடத்தியது. அல்ஹம்துலில்லாஹ்…
BY: Kaleel Baghawi
மாநாட்டின் அனைத்து தொடர் நிகழ்ச்சிகளிலும் தமிழகத்திலிருந்து வருகை தந்த சென்னை அடையார் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாம், சென்னை பனையூர், நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரியின் முதல்வர், திண்டுக்கல் ஜாமிஆ தய்யிபா அரபிக் கல்லூரியின் கவுரவ முதல்வர், சென்னை கிழக்குக் கடற்கரை சாலை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் ஜாமிஆ தய்யிபா இஸ்லாமியக் கல்லூரியின் வருகைதரு முதல்வர், பன்னூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல் ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் ‘ஆய்வியல் நிறைஞர்’ இளம் முனைவர் சொல்வேந்தர் அஷ்-ஷைஃக் பேராசிரியர் மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ எம்.ஏ., எம்.ஃபில் ஹழ்ரத் அவர்கள்குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
தொடர் நிகழ்ச்சிகளின் சிறிய தொகுப்பு இதோ தங்களின் பார்வைக்கு…
முதல் நிகழ்ச்சி: இஸ்லாமியக் குடும்பவியல் ஆய்வரங்கம்
23.01.2013 புதன்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic (கே-டிக்) தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் “இஸ்லாமியக் குடும்பவியல் ஆய்வரங்கம்” நடைபெற்றது.
இவ்வாய்வரங்க நிகழ்ச்சியில் இளவல் எஸ். அல் அமீன் இறைமறை குர்ஆனின் வசனங்களை கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, தலைவரின் தலைமையுரைக்குப் பின், சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் “பிள்ளைகள் வளர்ப்பில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில், நபி (ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கை, இஸ்லாமியக் குடும்பம் குறித்து திருக்குர்ஆன் குறிப்பிடும் வாழ்வியல் நெறிகள், பிள்ளைகள் வளர்ப்பில் எவ்வாறு கவனம் செலுத்துவது?, முன்னோர்கள் காட்டிய வழிமுறைகள், நிகழ்காலத்தில் நடைபெறும் விபரீதங்கள், அதை முறியடிக்கும் இஸ்லாமிய நடைமுறைகள் போன்றவற்றை பட்டியலிட்டு வரலாற்று நிகழ்வுகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
Your Kattankudy
இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சுமார் 200 நபர்கள் வரை பங்கேற்று பயனடைந்தனர். அனைவருக்கும் தேநீரும், இரவு உணவும் வழங்கப்பட்டன.
இரண்டாவது நிகழ்ச்சி: சுழலும் சொல்லரங்கம்
24.01.2013 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல் பகுதியிலுள்ள‘மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ’ பள்ளிவாசலில் குவைத் வரலாற்றில் முதல் முறையாக குவைத் வாழ் சங்கத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மட்டுமே பங்கேற்ற “இஸ்லாமிய வளர்ச்சியில் அதிகம் நிறைந்திருப்பது… சாதனைகளா? சோதனைகளா? போதனைகளா? நடைமுறைகளா?” என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான ‘சுழலும் சொல்லரங்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இளவல் எம்.என். அப்துல் பாஸித் இறைமறை குர்ஆனின் வசனங்களை கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, தலைவரின் தலைமையுரைக்குப் பின், ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ எஸ். காஜா முஹ்யத்தீன் உலவீதுவக்கவுரையாற்ற, சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் நடுவராக பங்கேற்க, சாதனகைளே! என்ற தலைப்பில் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, சோதனைகளே! என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,போதனைகளே! என்ற தலைப்பில் துணைத்தலைவர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் நடைமுறைகளே! என்ற தலைப்பில் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு செயலாளர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
சங்கத்தின் மதரஸா மாணவிகள் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களான அஸ்மாவுல் ஹுஸ்னாவை இனிய குரலில் அழகான முறையில் மனப்பாடமாக ஒப்புவித்தனர். இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சுமார் 400 நபர்கள் வரை பங்கேற்று பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலரும், தேநீரும், இரவு உணவும் வழங்கப்பட்டன.
மூன்றாவது நிகழ்ச்சி: சிறப்பு ஆய்வரங்கம்
25.01.2013 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:30 மணி முதல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பகல் 1:45 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic (கே-டிக்) தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் “சிறப்பு ஆய்வரங்கம்” நடைபெற்றது.
இவ்வாய்வரங்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் “இஸ்லாமோஃபோபியா (Islamophobia)” என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில், நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்றைய விஸ்வரூப காலம் வரை இஸ்லாத்தின் எதிரிகள் எவ்வாறு இஸ்லாம் குறித்து பொதுமக்களிடம் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி வருகின்றனர் என்பதையும், மேற்கத்திய உலகத்தின் பொய் பித்தலாட்டங்களையும், அனைத்து தவறாக பிரச்சாரங்களையும் முறியடித்து எவ்வாறு இஸ்லாம் வெகுவாக மக்களின் உள்ளங்களில் பதிந்து இஸ்லாத்தை தழுவுகின்றனர் என்பதையும், இஸ்லாம ஒன்றுதான் இவ்வுலகில் அதிகம் விமர்சிக்கப்பட்ட மார்க்கம், மிக வேகமாக வளரும் மார்க்கம் என்பதையும் பட்டியலிட்டு வரலாற்று நிகழ்வுகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சுமார் 800 நபர்கள் வரை பங்கேற்று பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலரும், தண்ணீரும், பேரீத்தம்பழங்களும் வழங்கப்பட்டன.
நான்காவது நிகழ்ச்சி: சிறப்புப் பட்டிமன்றம்
25.01.2013 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 11:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப, ‘அல்-ஷாயா’ பள்ளிவாசலில் குவைத் வாழ் சங்கத்தின் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற “இன்றைய தலைமுறையினரிடம் சமுதாய அக்கறை… பெருகி வருகிறதா? அருகி வருகிறதா?” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜமாஅத்துல் உலமா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எஸ். அபூதாஹிர் மஸ்லஹீ இறைமறை குர்ஆனின் வசனங்களை கிராஅத் ஓத, தலைவரின் தலைமையுரைக்குப் பின், துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீதுவக்கவுரையாற்ற, இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்புரையாற்றினார். குவைத் இலங்கைத் தூதரத்தின் இரண்டாம் நிலை செயலர் அல்ஹாஜ் என்.எம்.எம். அனஸ் அவர்களும், குவைத் இலங்கைத் தூதர் மேதகு ஸி.ஏ.ஹெச்.எம். விஜேரத்னே அவர்களும் வாழ்த்துரை வழங்க, பட்டிமன்றத்தின் நோக்கம், வாதிடும் முறைகள், தலைப்பு குறித்த விளக்கம் போன்றவற்றை சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் நடுவராக பங்கேற்று விரிவாக எடுத்துரைக்க, பள்ளிவாசல் முழுவதும் மக்கள் நிரம்பியிருக்க பட்டிமன்றம் ஆரம்பமானது.Your Kattankudy
“இன்றைய தலைமுறையினரிடம் சமுதாய அக்கறை பெருகி வருகிறது!” என்ற அணிக்கு மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு செயலாளர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி தலைமையேற்க, அணியின் உறுப்பினர்களாக பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., மற்றும் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம். முஹம்மது நாஸர் ஆகியோர் பங்கேற்று சிறப்பான முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
இவர்களின் கருத்துக்களுக்கு எதிராக, “இன்றைய தலைமுறையினரிடம் சமுதாய அக்கறை அருகி வருகிறது!’ என்ற அணிக்கு துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையேற்க, அணியின் உறுப்பினர்களாக துணைத் தலைவர் மவ்லவீ எம்.ஜைனுல் ஆபிதீன் பாகவீ, மற்றும் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) உறுப்பினர் மவ்லவீ எஸ். காஜா முஹ்யத்தீன் உலவீ ஆகியோர் பங்கேற்று சிறப்பான முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
இரு அணியினரும் தங்களின் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்கு திருக்குர்ஆனின் வசனங்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள், வரலாற்றுச் சம்பவங்கள், அறிஞர்களின் வார்த்தைகள், நிகழ்கால நடப்புகள், புள்ளி விபரங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள் என பல்வேறு வகைகளில் ஆதாரங்களை பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இரு அணிகளும் தங்களின் வாதங்களை நிறைவு செய்தவுடன், இன்றைய தலைமுறையினரிடம் சமுதாய அக்கறை பெருகி வருகிறது போன்று இருந்தாலும் அருகி வருகின்றது. அருகி வருவது போல் தெரிந்தாலும் பெருகி வருகின்றது என்று நடுவர் தீர்ப்பளித்து அதை நிவர்த்தி செய்வதற்குண்டான வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
“காலத்திற்கேற்ற தலைப்பு” என்றும், “ஒரே தலைப்பில் பல்வேறு கருத்துக்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேசியது சிறப்பாக இருந்தது” என்றும், “அதிகமான ஆலிம்கள் பங்கேற்று விவாதம் செய்தது புதுமையாக இருந்தது” என்றும், “தொடர்ந்து இதுபோன்று பல தலைப்புகளில் பல கோணங்களில் மக்களுக்கு எடுத்துரைத்து, மார்க்கச் செய்திகள் அனைவருக்கும் சென்றடைய K-Tic சங்கம் முயற்சி செய்ய வேண்டும்” என்றும் கலந்து கொண்டவர்களின் பெரும்பாலானவர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து விட்டு சென்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் மதரஸா மாணவிகள் இஸ்லாமிய வாழ்வியல் முறைகளை எடுத்துரைக்கும் அழகிய பாடலை பாடினர். இச்சிறப்புமிகு விழாவில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சுமார் 600 நபர்கள் வரை பங்கேற்று பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலரும், தேநீரும், இரவு உணவும் வழங்கப்பட்டன.
ஐந்தாவது நிகழ்ச்சி: சிறப்புக் கருத்தரங்கம்
26.01.2013 சனிக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், மஸ்ஜிதுல் கபீர் உள்ளரங்கத்தில் “என்னைக் கவர்ந்த பெருமானார் (ஸல்)” என்ற தலைப்பில் பிற சமய சகோதரர்கள் பங்கேற்ற கருத்தரங்கமும், “விமர்சனங்களை வென்ற தூயவர்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றன.
இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் குவைத், ஸுலைபிஃகாத் அல் ஹஸன் பள்ளிவாசலின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது ஃபாரூக் காஷிஃபி இறைமறை குர்ஆனின் வசனங்களை கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீதுவக்கவுரையாற்ற, குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் நிர்வாகி கவிஞர் பட்டுக்கோட்டை சத்யன் “என்னைக் கவர்ந்த பெருமானார் (ஸல்)” என்ற தலைப்பில் கருத்துரை வழங்க, சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் “விமர்சனங்களை வென்ற தூயவர்” என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். அவர்கள் தனது உரையில், நபி (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட விமர்சனங்கள், அவற்றை முறியடித்த அவர்களின் வாழ்க்கை முறை, விமர்சிப்பவர்களின் அந்தரங்க திட்டங்கள், அவற்றை களைவதற்கான இஸ்லாமிய சமூகத்தின் செயற்திட்டங்கள் போன்றவற்றை பட்டியலிட்டு வரலாற்று நிகழ்வுகளையும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
இச்சிறப்புமிகு விழாவில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சுமார் 200 நபர்கள் வரை பங்கேற்று பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸீரத்துன் நபி (ஸல்)சிறப்பு மலரும்,தேநீரும், இரவு உணவும் வழங்கப்பட்டன.
“K-Tic (கே-டிக்) பிறை செய்திமடல்” ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு:
குவைத்தின் முதல் தமிழ் இஸ்லாமிய இலவச மாத இதழான “K-Tic (கே-டிக்) பிறை செய்திமடல்” இதழின் “8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர்” வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
குவைத் இந்திய மற்றும் இலங்கைத் தூதர்கள், தேனீ நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஜே.எம். ஹாரூன் ரஷீத் எம்.பி., ஆகியோரின் வாழ்த்துரைகள், அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் 60 பக்கங்களில் வண்ணமயமாக உருவாக்கப்பட்ட ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலரை மிர்காப், குவைத் சிட்டி நிகழ்ச்சியில் குவைத் இலங்கைத் தூதர் மேதகு ஸி.ஏ.ஹெச்.எம். விஜேரத்னே அவர்கள் வெளியிட முதல் பிரதியை குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினர் ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்களும், இரண்டாவது பிரதியை குவைத் இலங்கைத் தூதரத்தின் இரண்டாம் நிலை செயலர் அல்ஹாஜ் என்.எம்.எம். அவர்களும் பெற்றுக்கொண்டனர். ஃபஹாஹீல் மற்றும் ஃகைத்தான் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் மலரை வெளியிட சங்கத்தின் ஆலோசனை குழுவினரும், பிற அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொது நல சேவையாளர்களும் பெற்றுக் கொண்டனர்.
பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி:
குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக சமூக மாற்றத்திற்கான ஓர் பயிற்சிக்களமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கும் “மக்கள் கருத்தரங்கம்” என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை “சமூக அவலங்களும்… அதற்கான தீர்வுகளும்…” என்ற கருப்பொருளில் குவைத்தில் கடந்த 21.12.2012 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலாக அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி)‘ பள்ளிவாசலில் முதல் முறையாகஏற்பாடு செய்தது. சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் கருத்துரைகளை வழங்கிய 22 சகோதர, சகோதரிகளுக்கு சான்றிதழ்களையும், சிறப்பாக உரையாற்றிய ஒருவருக்கு சிறப்புப் பரிசையும் வழங்கினார்கள்.
“எவருடைய உள்ளத்தில் திருக்குர்ஆனின் எந்தப் பகுதியும் மனனமாக இல்லையோ அவர் பாழடைந்த வீட்டைப் போன்றவராவார்” (அறிவிபபாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ஆதார நூல்: ஸுனன் திர்மிதீ) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளுரைக்கேற்ப குவைத் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் வசனங்களை பதிய வைக்கும் அரும்பணியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பல்வேறு வகைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில், 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு குவைத் வாழ் தமிழ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் திருக்குர்ஆன் மனப்பாட போட்டியை மூன்று பிரிவுகளாக கடந்த 18.01.2013 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:30 மணி முதல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பகல் 2:30 வரை குவைத், ஃகைத்தான், K-Tic (கே-டிக்) தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலாக அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி)’ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்தது. ஏறக்குறைய 40க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஆலிம் பெருந்தகை மவ்லானா மு. ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களில் மூன்று பேருக்கும், பெண்களில் மூன்று பேருக்கும் முதல் பரிசுகளையும், முழுமையாக மனப்பாடமாக ஒப்புவித்த அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளையும் வழங்கினார்கள். குவைத் புதுச்சேரி முஸ்லிம் பேரவை நிர்வாகிகள் பரிசுகளை அன்பளிப்பாக வழங்கினர்.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மவ்லானா அவர்கள் துஆ ஓதினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
Leave a comment