கமலுக்கு கைகொடுக்க ரஜனி!

kamal-rajani[1]விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெளிவந்தாலும் கமலுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இந்தப் படத்திற்காக கமல் தனது சொத்துக்கள் அனைத்தையும் எழுதிக் கொடுத்து பெரும் செலவில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால் கமல் இயக்கும் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த நஷ்டத்தை ஈடுசெய்வேன் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்தப் பேச்சு அனைத்து தரப்பிலும் உற்சாகத்தை தந்துள்ளது. இதே போல் பல முன்னணி திரையுலகினரும் கமலுக்கு ஆதரவு அளித்துவரும் நிலையில் கமலின் ரசிகர்களும் அவருக்கு உதவ ‘டிமான்ட் டிராப்ட்டை’ கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு அனுப்புகின்றனராம்.

-தினகரன்

Published by

Leave a comment