புதிய நீர்தாங்கி திறப்புவிழா! மக்களின் நீர் பிரச்சினை தீர்வுக்கோரிக்கை நகரபிதா ஹில்மியினால் முன்வைப்பு!

6முஹம்மது  ரைஷ் 

பாவனைக்கான நீர் இன்றி மக்கள் எதிர்நோக்கும் அசௌகரிங்களை கருத்திற் கொண்டு மக்களின் நலன் கருதி கந்தளாய் பகுதியில் 4600 மில்லியன் ரூபா செலவில் சுத்தியரிக்கப்பட்ட நீரினை சேமிக்கக்கூடிய புதிய நீர் தாங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இருந்து வந்த நீர்த்தாங்கியில் சேமிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவு போதாமையினால் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

சில நேரங்களில் மட்டுமல்ல சில நாட்களாக கூட நீர் தடைப்படும் நிலையினைக் கூட மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அன்றாடம் எதிர்நோக்கி வந்திருந்தனர்.

இவற்றினைக் கருத்திற் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத்திற்கான புதிய நீர்த்தாங்கி திறப்பு விழா நிகழ்வில் கிண்ணியா நகசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி மக்கள் அன்றாட தேவைக்காக நீரின்றி எதிர்நோக்கும் அசௌகரியங்களை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதோடு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டினையும் எடுத்துரைத்தார்.

கந்தளாய், முள்ளிப்பொத்தானை, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், தோப்பூர் மற்றும் சில பிரதேசங்களில் மக்களின் அன்றாட பாவனைக்கான நீர் அதிகமாக தேவைப்படும் நிலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதையும், இவற்றை நிவர்த்தி செய்து திருகோணமலையின் அநேக பகுதிகளுக்கும் நீர் தடையின்றி அநேக நேரம் கிடைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ தினேஸ் குணவர்த்தன மற்றும் நீர் விநியோக பொது முகாமையாளர் ஆகியோருடனான கலந்துரையாடலில் கிண்ணியா நகரசபை நகரபிதா தேபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி குறித்த கோரிக்கையினை முன்வைத்தார்.அத்தோடு கிண்ணியா மாகாமார் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கி விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவது சம்பந்தமாகவும் கிண்ணியா நகரபிதா சந்திப்பின் போது கலந்துரையாடினார்.

கந்தளாய் நீர் விநியோக சபை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புத்த சாசன மற்றும் மதவிவகார பிரதி அமைச்சர் கௌரவ ஏ.டி.எஸ். குணவர்த்தன, நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ தினேஸ் குணவர்த்தன, நீர் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ நிருபமா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஸ்வர், மாகாண சபை நீர்ப்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ உதுமான் லெப்பை, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், நீர் விநியோக பொது முகாமையாளர், மற்றும் நகரசபை பிரதேச சபை தலைவர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

1

3

6

Published by

Leave a comment