– வெளிவிவகார அமைச்சு விளக்கம்
உண்மையான காரணத்தை குறிப்பிடாது மாநாடுகள், செயலமர்வுகள் நடத்தும் போர் வையில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற் படுத்த திட்டமிட்டுள்ள தாலே சர்வதேச சட்டத் தரணிகள் சங்க பிரதி நிதிகளுக்கு விஸா நிராகரிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இவர்கள் வர்த்தக விஸா மூலமே இங்கு வர விண்ணப்பித்துள்ளதோடு இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு குறித்தும் குற்றப் பிரேரணை பற்றியும் ஆராய்வதே இவர்களின் நோக்கம் என் பது ஊடக அறிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ். வர்மா அடங்கலான சர்வதேச சட்டத்தரணிகள் சங்க குழு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வர இருந்தது. ஆனால் தான் இலங்கை செல்லப் போவதில்லை என வர்மா அறிவித்திருந்தார்.
இது தொடர்பிலான உண்மை நிலைமையை விளக்கியுள்ள வெளிவிவகார அமைச்சு இவர்களில் மூவர் மாநாடு மற்றும் செயலமர்வுகளில் பங்கேற்க வருவதாக கூறியே விஸாவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தாம் இலங்கை வருவதற்கான உண்மை காரணத்தை குறிப்பிட்டிருக்கவில்லை. இவர்கள் இலங்கை வருவது மாநாடுகளில் பங்கேற்கவோ செயலமர்வுகளில் கலந்து கொள்ளவோ அல்ல எனவும் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கமே இதில் உள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்து.
இதேவேளை தங்களுக்கு விஸா வழங்கப்படாது குறித்து தாம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் முறையிட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியது.
-தினகரன்
Leave a comment