கிண்ணியாவில் மீண்டும் அடைமழை! வடிகாண் துப்பரவுக்கு டொக்டர் ஹில்மி உத்தரவு!

– முகம்மட் ராஸி 

BY: M. RAZI
BY: M. RAZI

கிண்ணியா பிரதேசத்தில் மீண்டும் அடைமழை பெய்துவருவதால் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் வெள்ளம் ஏற்படக்கூடுமென்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி, மழை நீர் தேங்கியுள்ள இடங்களை  நேரில் சென்று பார்வையிட்டதோடு தேங்கும் நீரினை வெளியேற்றுவதற்கான ஒழுங்குகளை நகரசபை சுகாதார தொழிலாளிகள், வீதித் தொழிலாளிகள் மூலமாக செய்வதற்கான உத்தரவினையும் பிரப்பித்துள்ளார்.

நேற்றும் இன்றும் தொடர்ந்து அடைமழை பெய்துவருவதால் மீண்டும் வெள்ள அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேகமூட்டங்கள் சூழ்ந்து தொடர்ந்தும் மழை பெய்யும் அறிகுறிகள் காணப்படும் நிலையில் மக்கள் பெரும் பயத்துடனும் காணப்படுகின்றனர். காரணம் மழை பெய்யும் போது இடியுடன் மின்னலும் ஏற்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது.

நேற்று இரவு பெய்த மழையுடன் இடி மின்னல் காரணமாக சிறுமியொருவர் எரிகாயங்களுடன் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளார்.

BY: M. RAZI
BY: M. RAZI

Published by

Leave a comment