
(Mathiyanpan)
-காத்தான்குடி – மதியன்பன்
தடங்கலோ பலதைக் கண்டு
தடைகளைத் தாண்டி வந்து
இடம்தனைப் பிடித்துக் கொண்ட
இணைய தளம் இன்று நீயோ
கடந்துளாய் வருடம் ஒன்று.!
காத்தான்குடி பெருமை கொள்ள…
நடந்துநீ வந்த பாதை
நந்தவனம் போலொன்றாகும்..
பலதளம் பார்த்த போதும்
பார்த்திடத் துடிக்கும் உன்னை..!
களநில வரந் தன்னை
கண்முன்னே கொணர்வாய் நீயோ..
விளக்கமாய் ஊரின் தகவல்
வினைதிறன் கொண்ட செய்தி
துலக்கமாய் தருவ தாலே
துணிவுடன் வாழ்த்தலாமே..?
ஊரதன் பெயருக் குள்ளே
உங்களை வைத்துவிட்டாய்..
வேரது போல நின்றாய்..
விடயங்கள் இன்னும் வேண்டும்.
யாருக்கும் தாஜா வேண்டாம்
யதார்த்தத்தை சொல்ல வேண்டும்.
ஊருக்குப் பெருமை சேர்த்த
உன்தனை வாழ்த்து கின்றேன்.
04.02.2013
Leave a comment