உலகில் மிகப் பெரிய ‘குயின்ஸ் மேரி ‘கப்பல் கொழும்பில்!

queen_mary_2_-_pic_1_200_134[1]உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான ‘குயின்ஸ் மேரி ” கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கைக்கு மிகப் பெரிய பயணிகள் கப்பலொன்று வருவது -இதுவே முதற் தடவையாகும். இதன் நீளம் 500 மீற்றர்களென துறைமுகங்கள் நெடுஞ்சாலை அமைச்சு கூறியது.

இந்த கப்பலில் 3500 பயணிகளும் 3000 கப்பல் சிப்பந்திகளும் வந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த குயின்ஸ் மேரி கப்பல் இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் இருந்து இலங்கை வந்தது.

சமாதான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதையடுத்து பாரிய பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் கப்பல்கள் இங்கு வரும் எனவும் துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மேற்படி கப்பல் இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிக்க உள்ளது .

அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment