– PMGG ஊடகப் பிரிவு

இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடுமுழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்றன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்படு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் அதன் மக்கள் அரங்கில் நடைபெற்றன.
சூறாசபை உறுப்பினர் SMM.பஷீர் ஆசிரியர் நெறிப்படுத்த சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிர்தௌஸ் நளீமி அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைக்க பின்னணியில் இலங்கையின் தேசிய கீதம் ஒலிக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி தலைமை உரை நிகழ்த்த, முஹைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயலின் பேஷ் இமாம் AGM.அமீன் (பலாஹி), பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நகரசபை உறுப்பினரும் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
இதன்போது காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயலின் பேஷ் இமாம் AGM.அமீன் (பலாஹி), தொழிலதிபர் KMA.ஜவாத், சூறாசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன், MLM.லபீர் ஆசிரியர் உட்பட உலமாக்கள், வர்த்தகர்கள், சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாற்சோறு வழங்கப்பட்டன.
நிகழ்வுகளில் இறுதியில் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பெண் செயற்குழு உறுப்பினர்கள் தேசியக் கொடிகளைக் கைகளில் ஏந்தியாவர்களாக கூடியிருந்தனர்.






Leave a comment