துபாய் இலங்கை தூதுவராலயத்தில் இடம்பெற்ற 65 வது தேசிய தின நிகழ்ச்சிகள்

BY: ACM. Sabry
BY: ACM. Sabry

-ACM. சப்ரி

இலங்கையின் 65 வது தேசிய தின உத்தியோக பூர்வ நிகழ்ச்சி இன்று ( 2013.04.04 ) துபையில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

கௌன்சல் ஜெனரல் MM.  அப்துல் றஹீம்  தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில்  துபாயில் உள்ள இலங்கையர்கள்,   பிரமுகர்கள்  என அதிகமானவர்கள்  கலந்து சிறப்பித்தனர் .

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதப்பெரியார்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில்  அப்துல் றஹீம்  இலங்கைத் தேசிய கொடியை ஏற்றி பிரதான உரையை ஆற்றினார் .

இலங்கை ஜனாதிபதி, பிரதம மந்திரி, வெளிவிவகார அமைச்சர்களின் செய்திகளும் முறையே ஆங்கிலத்தில், தமிழில், சிங்களத்தில்  வாசிக்கப்பட்டன .

துபாய் வாழ் இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் இம் முறை அதிக அளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment