– பழுளுல்லாஹ் பர்ஹான்

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 65வது தேசிய சுதந்திரதினம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ‘சுபீட்சமான தாய் நாடு- ஒளிமயமான நாளைய தினம்’ என்ற தொனிப் பொருளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில்; இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் அதிதிகள் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை தேசியக்கொடியேற்றல் தேசியக்கீதம் இசைத்தல் ஜனாதிபதி மற்றும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் உரை என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் சரவமதப்பெரியாரகள் மாகாண ஆளுநர் மொஹான் வஜேவிக்கிரம என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






Leave a comment