-பழுளுல்லாஹ் பர்ஹான்

இலங்கை திருநாட்டின் 65வது சுதந்திரதினம் நாடெங்கிலும் இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின நிகழ்வு இன்று காலை காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி நகரசபை முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கின் சம்மேளன பிரதித்தலைவர் ஜவாத் பீ.ஏ, காத்தான்குடி நகர சபை பிரதித்தலைவர் ஜெஸீம், ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரி அதிபர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ்(றஹ்மானி), சர்வமதப் பெரியார்கள், மும்மதத் தலைவர்கள், இரானுவத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசியக் கொடி ஏற்றி தேசியக்கீதம் இசைக்கப்பட்டதுடன் அதிதிகள் உரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






Leave a comment