கல்முனையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின விழா

BY: FM. Farhan
BY: FM. Farhan

-பழுளுல்லாஹ் பர்ஹான்

கல்முனை மாநகர சபை, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மருதமுனை, ‘ஹியுமன் லிங்க்’ மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளுக்கான நிலையம் மருதமுனை, ‘ஒறேஞ் டீ’ நிறுவனத்தினர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகளிற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகளின்போது பிரதம அதிதியினால் தேசியக் கொடி ஏற்றியதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  

பல தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்து சகல மதத்தவர்களும் ஒரே இலங்கையர்களாக சுதந்திரமாக வாழ வழி வகுத்த அதிமேதகு ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டி முதல்வரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

‘ஒறேஞ் டீ’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின்போது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு வறிய மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை வழங்கிவைக்கப்பட்டது.

Published by

Leave a comment