அஸ்ஸலாமு அலைக்கும்.
முதலில் எமது வாசகர்களுக்கு எமது தேசத்தின் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
எமது தேசத்தின் 64வது சுதந்திர தினமான 04-02-2012 இல் இருந்து இணையத்தளங்களுக்கோர் முன்மாதிரியாக உலகில் கால்பதித்து வலம் வருகின்றது உங்கள் காத்தான்குடி. அல்ஹம்துலில்லாஹ்!
கடந்த முப்பது வருடகாலமாக இலங்கையில் நிலவி வந்த இனப்பிரச்சினைக்கும் இயற்கை அணர்த்தங்களுக்கும் முகம் கொடுத்து இன்று அல்லாஹ்வின் உதவியால் உலகின் பக்கம் இந்நகரம் ஈர்க்கப்பட்டிருக்கின்றது.
ஆசியாவில் இரண்டாவதும் இலங்கையில் முதலாவது அடர்த்தியான ஓர் நகரமாகவும் திகழும் காத்தான்குடிக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.எமது அழகிய நகரத்தையும் அதன் செயற்பாடுகளையும் எமது மக்களினதும் மண்ணினதும் திறமைகளையும் சாதனைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் உன்னதமான நோக்கில் ‘உங்கள் காத்தான்குடி’ உங்கள் இதயங்களை இன்று தொட்டுச் செல்கின்றது.
எமது நகரின் பிரதான அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் தனித்தனியே அழகிய பக்கங்களாக வடிவமைத்து இணையத்தளங்கள் ஊடாக இன்று உலகை ‘உங்கள் காத்தான்குடி’ வலம் வந்து கொண்டிருப்பதானது இலங்கையிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எம் உறவுகளுக்கு நிச்சயம் பலன் உள்ளதாக இருக்கும் என்பதோடு அவர்களின் உறவுகளையும் நண்பர்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் அமையும் என்பதையும்; எமது நகரையும் அதன் செயற்பாடுகளையும் ஏனைய மக்களும் அறிந்து கொள்ள வழி வகுக்கும் என்பதனையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்.
ஒரு ஊரின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி அழகிய பக்கங்களாக வடிவமைத்து எமது நகரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஓர் சமூக நோக்கில் இன்று ‘உங்கள் காத்தான்குடி’ வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இன்ஸா அல்லாஹ் விரைவில் முடிந்தளவு ஏனைய விடயங்களையும் பக்கங்களையும் தொகுத்து அதன் தகவல்களையும் தரவுகளையும் வழங்கவுள்ளோம்.
உலகில் இன்று தங்களது வியாபாரத்திற்காகவும் பொதுச் சேவைக்காகவும் மற்றும் செய்தி ஊடகங்களுக்காகவும் பல கோடி இணையத்தளங்களுக்குள் ‘உங்கள் காத்தான்குடி’ தனிச் சிறப்பைப் பெருகின்றது. உலகில் ஒரு நகரின் அனைத்து விடயங்களையும் செயற்பாடுகளையும் முதன் முதலில் ஒரே தளத்தின் கீழ் கொண்டியங்கும் ‘உங்கள் காத்தான்குடி’ எம் நகருக்கும் அதன் மக்களுக்கும் தனித்துவமான கௌரவத்தையும் சிறப்பையும் பெற்றுத் தரும் என்பதை மகிச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
இத்தளத்தினை பார்வையிடும் சகோதரர்களுக்கு மேலும் உதவும் முகமாக இலங்கையிலும் உலகிலும் உள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய, பொது அமைப்புக்களின் சுமார் 100 மேற்பட்ட இணையத்தளங்களினை ஒவ்வொரு பக்கங்கள் ஊடாகவும் இணைத்து வரும் அதே நேரம் மேலதிக இணையத்தளங்களையும் இன்ஷாஅல்லாஹ் இணைத்துக் கொள்ள இருப்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
அரசியல் சாயங்களுக்கப்பால் தனித்து நின்று சமூக நல நோக்கம் மாத்திரம் கருத்திற் கொண்டு இயங்கும் ‘உங்கள் காத்தான்குடி’ இணையத் தளத்திற்கு உங்கள் அன்பான கருத்துக்களையும், தகவல்களையும், ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் இன்முகம் கொண்டு வரவேற்கின்றோம்.
இத்தருணத்தில் எமது இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்து செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் மதிப்புக்குரிய ஊடகவியலாளர்கள், எமது நிர்வாக உறுப்பினர்கள், உள்ளுர் மற்றும் கடல் கடந்து வாழும் எமது பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், அபிமானிகள், உள்ளுர் மற்றும் வெளியூர் அரச, பொது, சமய, அரசியல் மற்றும் விளையாட்டு அமைப்புக்கள் அனைவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் கடமைப்படுகின்றோம்.
பக்க வடிவமைப்புக்கள் தொடர்ந்தும் பதிவேற்றப்பட்டு வருவதால் இன்ஷா உங்கள் காத்தான்குடி விரைவில் முழு வடிவம் பெறும் எனும் நற்செய்தியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
இது உங்கள் களம் -காத்தநகரின் தகவல் தளம்!
நன்றி .
வஸ்ஸலாம்.
என்றும் அன்புடன்
இயக்குனர் மற்றும் முகாமைத்துவம்
உங்கள் காத்தான்குடி

Leave a comment