
ஏ.எஸ்.கே ஊடக நிறுவனத்தின் அலை எப்.எம் இன் குடும்ப ஒன்று கூடல் “சன்டே பண் டே” நிகழ்வு நேற்றுமாலை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஏ.எஸ்.கே ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.குகநாதன், நிறைவேற்று அதிகாரி சர்தார் ஜெமீல், அறிவிப்பாளர்கள் மற்றும் நேயர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நேயர்களுக்கான நடனம், கண்ணைக் கட்டியவாறு யோகட் ஊட்டுதல், நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் இடப்பட்ட ஆப்பிள் பழத்தை உண்ணல், தலையில் அணிந்து கொண்ட கூம்பக வடிவ தொப்பியில் பொருத்தப்பட்ட ஊசியினால் பலூன் உடைத்தல்,அழுதல் போன்ற பல்வேறு பட்ட முற்றிலும் புதுமையான பல்சுவை போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்தோடு அறிவிப்பாளர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இனிய மாலைப் பொழுதில் அலை எப்.எம் அறிவிப்பாளர்களும் நேயர்களும் ஒன்று கூடி மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கி இருந்தனர்.




Leave a comment