‘உங்கள் காத்தான்குடி’க்கோர் வாழ்த்து மடல்! (வாசகர் ஆக்கம்)

best wishes[1]முந்நூற்று அறுபத்தாறு நாட்களும்
முழு உலகிலும் முழு மனிதனாய் தடம்பதித்து
ஓராண்டை பூர்த்தியாக்கியுள்ளாய் நீ
‘உங்கள் காத்தான்குடி’
இன்னும் உன் சேவைகள் தொடர
என் இனிய வாழ்த்துக்கள்!

சின்னஞ் சிறுசுகளின் உள்ளத்திலும்
பெரியோர்களின் மனதிலும் தினமும்
பவனி வந்தாய்
உங்கள் காத்தான்குடியே
நீ மென்மேலும் வளர
என் இனிய வாழ்த்துக்கள்!

உன் செய்திகளுக்கும்
எம் ஊரின் அத்தனை தகவல்களுக்கும்  
உனக்கு நிகர் நீயே.
அதிகரித்துவரும் உன் இரசிகர் வட்டத்தில்
நானும் ஒருத்தியாய்
இந்நாளில் அகமகிழ்கிறேன்.
உன்னைத்தொட்ட புகழ்
விண்ணைத் தொட
என் வாழ்த்துக்கள்!

அன்று வெளி உலகைக் காண முற்பட்ட நீ
இன்று வெள்ளிடை மழையாய் பிரகாசிக்கின்றாய்.
என்றும் வெளிச்சத்தை அள்ளி வீச
இறைவனைப் பிரார்த்தித்தவளாய்…
‘உங்கள் காத்தான்குடி’க்கு
என் இனிய வாழ்த்துக்கள்!

-MB. நுஸ்ஹா ஷிபா
 
 

Published by

Leave a comment