
– பழுளுல்லாஹ் பர்ஹான்
இன மத பேதம் நாட்டை அழிவுக்குள் இட்டுச்செல்லும் அதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம் எள திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
65வது தேசிய சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து படைகளின் தளபதிகளுக்கு முன்பாக நின்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தமிழில் உரையாற்றினார். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் திருகோணமலை மாவட்டம் இங்கு சிங்கள பௌத்த மக்களும் தமிழ் இந்து மக்களும் ஒன்றுபட்டு கட்டிய விகாரைதான் திருக்கோணமலை வெல் கம ரஜ மஹா விகாரை அதுமட்டுமல்ல கண்டி மீரா மக்கம் பள்ளிவாயல் கட்ட காணி வழங்கியது பண்சலதான். மக்கள் ஒன்றாக வாழும் போது இன மத பேதம் ஏதும் இல்லை.
எனவே இன ரீதியில் நாட்டை பிரிப்பது சாத்தியமில்லை இந்த நாட்டில் எல்லோரும் சமஉரிமையோடு வாழ்வதுதான் நல்ல தீர்வு. இனபேதம் போலவே மத பேதம் நாட்டில் அழிவை உண்டாக்கும். யாராவது இந்த பேதத்தை உறுவாக்கினால் அது நாட்டில் பிரிவினையை உறுவாக்கச்செய்யும். நாம் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம். இலங்கை மக்களான சிங்கள தமிழ் முஸ்லிம் நண்பர்களே உங்களுக்கென்று ஒரு கலாசாரம் உண்டு அதனை நாம் பாதூகாப்போம். நாடு பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டதன் பின்னர் இறைமை, ஒருமைப்பாட்டிற்காக பல்வேறு சவால்களுக்கு முகம்கொண்டுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கமே சிறந்த பதிலாகும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாறுகையில்,
‘திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கமே வெளிநாட்டு படைகளுக்கு இருந்தது. நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போதிலும் திருகோணமலையில் பிரித்தானிய படையினர் முகாம்களை அமைத்து தங்கியிருந்தனர்.அவர்களின் முகாம்கள் 1956ஆம் ஆண்டே அங்கிருந்து அகற்றப்பட்டன.
இந்த பகுதியில் புத்தர்சிலை சுற்றி முட்கம்பிகள் அடிக்கப்பட்டிருந்தன. புத்தப்பெருமானுக்கும் சுதந்திரம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அந்த நிலைமைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழக்கூடியவகையில் பயங்கரவாதிகளிடமிருந்து நாடு மீட்கப்பட்டது. சுதந்திரத்திற்கு மட்டுமல்லாது இறைமை, ஒருமைப்பாட்டிற்காக பல சவால்களுக்கு முகம்கொண்டுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் நாட்டில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். நல்லிணக்கம் இருத்தல் வேண்டும்.
1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை கிடைத்தது. ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற எந்தவொரு நாடும் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பிரகடனத்திற்கு நாம் கௌரவமளிக்கின்றோம்.
நாட்டில் இன, மத பேதங்கள் இருக்கமுடியாது. பயங்கரவாதிகள் தலைத்தூக்குவதற்கும் இடமில்லை. நாட்டில் சகலருக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன, மத வேறுபாடுகள் நாட்டில் அழிவையே உருவாக்கும். பேதங்கள் உருவாகினால் அது நாட்டின் அழிவுக்கே இட்டுச்செல்லும். பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடப்பாடு அரசாங்கத்திற்கு மட்டுமல்ல எதிரணிக்கும் இருக்கின்றது’ என்றார்.
Leave a comment