– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின்2012 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இவ் பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி.அஜந்த சமரகோன் கலந்துகொண்டு மேற்படி பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.
இங்கு பொலிஸ் பரீசோதனை மற்றும் பொலிஸ் வாகன பரீசோதனை என்பன இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எஸ்.பி.அஜந்த சமரகோன், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மவன் சில்வா,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறிப்பு இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் திருகோணாமலை மாவட்டத்தில் நடைபெறுவதால் அதிகளான பொலிசார் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்பு கடமைக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Leave a comment