திருகோணமலையில் 65 ஆவது சதந்திர தின நிகழ்வு: கிண்ணியாவிலும் அதற்கான ஏற்பாடுகள்!

– முகம்மட் ராஸி

BY: Mohammed Razi
BY: Mohammed Razi

  65 ஆவது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபை தவிசாளர் தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி, கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சுதந்திர தின நிகழ்வுக்கான பங்களிப்புகளை வழங்கும் பொருட்டு வீடுகள், கடைகள், நிறுவனங்கள் வாகனங்கள் போன்றவற்றில் தேசியக் கொடியினை பறக்கவிடும், கொண்டாடும் ஏற்பாடுகளை செய்திருக்கின்றார்.

இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு மகனும் இன்று சுதந்திர காற்றை சுவாசிப்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாக உள்ளது. இதற்கு இலங்கை நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் காரணம் என்றால் அதுதான் உண்மை. அதற்காக நாம் இந்நாட்டு மைந்தர்கள் என்ற வகையில் முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நிம்மதியான வாழ்க்கையை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அதுபோலவே இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்படவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கிண்ணியா நகரசபை தவிசாளர் தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒன்றுகூடலில் கருத்துத் தெரிவிக்கும் போது நகரசபை என்பது மக்கள் தமது உள்ளங்களில் என்றும் மதிக்கக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.

இம்முறை சுதந்திர தின நிகழ்வு எமது மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால் நாம் அனைவரும் நிகழ்வை சிறப்பிக்க செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

BY: Mohammed Razi
BY: Mohammed Razi

நகரபிதாவின் ஏற்பாட்டில் கிண்ணியா நகரசபை எல்லைக்குள் ஒலிபெருக்கி அறிவித்தல் மூலமாக சுதந்திர தினத்திற்காக நாம் மதிக்கக்கூடிய தேசியக் கொடியினை எப்படி ஏற்றி பறக்கவிடுவதென்பதாக பிரதேச மக்களுக்கு அறிவுறித்தியதோடு தேசியக் கொடிகளையும் வழங்கியிருந்தார்.

கிண்ணியா நகரசபை எல்லைக்குள் நகரபிதாவின் அனுமதிப்பிரகாரம் ஒலிபெருக்கி அறிவித்தல் மூலமாக நாம் தேசாபிமானம் உள்ளவர்கள், எமது தேசத்தின் சுதந்திரத்தில் DP. ஜாயா, அறிஞர் சித்திலெப்பை போன்றோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். தேசியக் கொடியிலும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறமுள்ளது. அத்துடன் இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி தேசியக் கொடியேற்றல், பறக்கவிடுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். 65 ஆவது சுதந்திர தினம் இம்முறை எமது மாவட்டத்தில் நடைபெறவுள்ளதால். எமது பிரதேச ஒவ்வொரு மகனும் எமது வீடுகள், கடைகள், நிறுவனங்கள், வாகனங்கள், வீதியோரங்களில் கட்டாயம் தேசியக் கொடியினை பறக்கவிடுவதனால் நாமும் இந்நாட்டை மதிக்கிறோம் என்பதை காட்டமுடியும்.

எமது நாட்டினை மதிக்கும், நேசிக்கும் ஒவ்வொரு மகனும் தேசியக் கொடியினை நேராக, செங்குத்தாக கட்டி பறக்கவிடவேண்டும். கொடியை சாய்த்துக் கட்டுவது, பறக்கவிடுவது எமது நாட்டை நாம் அவமதிப்பது போன்றதாகும். அவ்வாறு நாம் நடந்து கொள்ளாது. தேசியக் கொடியினை நல்ல விதமாக கட்டி பறக்கவிடுவது கட்டாயமாகவுள்ளது. இவ்வாறு நாம் செய்தால் எமது தேசப்பற்றை நிரூபிக்கும் நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமைந்து விடும். என்பதாக நகரபிதா டொக்டர் எம்.எம். ஹில்மி கொடுத்திருக்கும் அறிவித்தல் தெரிவிக்கிறது.

Published by

Leave a comment