முத்தமிழ் வித்தகர் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன விழா – இன்று மட்டுவில் பல்வேறு நிகழ்வுகள்

DSC03986
By: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான் 

சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன விழா இன்று 01-02-2013 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. காலை 08.00மணிக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்திற்கு ஆராத்தி செய்யப்பட்டதன் பின் 08.10மணிக்கு கல்லடி சரவண வீதியிலிருந்து புதிய கல்முனை வீதி வழியாக சித்தி விநாயகர் ‘ பேச்சியம்மன் ஆலய துளசி மண்டபத்திற்கும் மீண்டும் மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திலிருந்து பழைய கல்முனை வீதி வழியாக துளசி மண்டபம் வரை மாபெரும் ஊர்வலம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு ‘ இராம கிருஸ்ண மிஸனின் தலைவர் ‘மத் சுவாமி கபாலீசானந்தாஜீ மகராஜ் விவேகானந்தா மத்திய மஹாவித்தியாலய அதிபர் திருமதி திலகவதி கரித்தாஸ் மட்டக்களப்பு சக்தி வித்தியாலயம், கல்லடி சிவாநந்தா வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம் விவேகானந்தா மத்திய மஹாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலை மாணவமாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உட்பட பலரும் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதேவேளை இன்று பிற்பகல் 03.00 மணியளவில் விஸேட நிகழ்வு சித்தி விநாயகர் ‘ பேச்சியம்மன் ஆலய துளசி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனன தின நினைவு மலர் வெளியிடப்படவுள்ளதுடன் வில்லுப்பாட்டு, நடனம், அதிதிகள் உரை என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்யவும் 

Published by

Leave a comment