கடல் திரைப்பட முத்தக் காட்சி ஏற்புடையதா?

Under18[1]பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் ஆக்கத்தில் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் கடல் திரைப்பட வெள்ளோட்ட வீடியோவில் கதாநாயகி, 15 வயதே ஆன துளசி, கதாநாயகனை உதட்டில் முத்தமிடுவது போல ஒரு காட்சி வருகிறது.

இவ்வளவு இளம் வயதில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும்வகையில் நடிக்க வைப்பது அறமா என ஒரு சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

எழுத்தாளர் ஞானி இது பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் திரைப்பட இயக்குநர்களுக்கு சமூகப்பொறுப்பு வேண்டுமென்கிறார்.

பிரபல இயக்குநர் பாக்கியராஜ் நடக்காததை ஒன்றும் அப்படிப்பட்ட காட்சிகள் காட்டிவிடவில்லை, ஆனாலும் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார்.

பாலியல் தொடர்பான விஷயங்கள் கண்ணியமாகவே கையாளப்பட்டு வருவதாகக் கூறுகிறார் நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி.

வளரும் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன் கதாநாயகி துளசிக்கு 15 வயதா என்பதல்ல பிரச்சினை, மாறாக திரைப்படத்தில் வரும் அக்கதாபாத்திரத்தின் வயதைத் தான் நாம் கவனிக்க வேண்டும், எப்படியும் மணிரத்னம் போன்ற மிகச் சிறந்த இயக்குநர்கள் சமூகத்திற்குத் தவறாக வழிகாட்டமாட்டார்கள் என்றார்.

மேலும் திரையுலகில் பெண்கள், சிறுமியர் அனைவருமே மிகப் பாதுகாப்பாக கௌரவமாக நடத்தப்படுகின்றனர் என்கிறார் அவர்.

இந்த விவகாரம் குறித்து எமது செய்தியாளர் டி. என். கோபாலன் அவர்கள் வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

-BBC/Tamil

Published by

Leave a comment