விஸ்வரூபம் பிரச்சினை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுக்கும் புது கோரிக்கை

mqdefault[1]-OIT

கமலுக்காக பதாதைகள் வைத்து குரல் கொடுக்கும் ரஜனி, அஜித்..

விஸ்வரூபம் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஸ்வரூபம் தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும்.

பிரச்சினையை வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும்.

இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

கமலுக்காக பதாதைகள் வைத்து குரல் கொடுக்கும் ரஜனி, அஜித்!

ரஜினிகாந்த் மற்றும் அஜீத் குமாரின் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  பதாதைகள் வைத்துள்ளனர்.

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகினர் கமலுக்கு ஆதரவாக உள்ளனர். நேற்று நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கமலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.

மேலும் கமல் ரசிகர்களும் அவரின் வீட்டுக்கு வெளியே கூடி, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ரசிகர்கள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமலுக்கு ஆதரவாகவும், விஸ்வரூபத்தை வெளியிடக் கோரியும் பேனர்கள் வைத்துள்ளனர். கமலுக்காக பிற நடிகர்களின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்சனை என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் வெளியாகும்வரை ‘தலைவா’ பட வேலைகள் துவங்காது – முதல் முறை வாய் திறந்த விஜய்!

விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய்.

விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய்.

விஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

ஆனால் அப்போதும் விஜய் அமைதியாக இருந்துவிட்டார். ஏற்கெனவே அரசியல் ஆர்வத்தில் அவரும் அவரது தந்தையும் செய்யும் செயல்களால் ஆட்சி மேலிடத்தின் கோபப் பார்வைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த நேரத்தில் கமல் பிரச்சினையில் தலையிடுவது ஆபத்து என அமைதி காத்தனர். ஆனால் கமல் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியதும், விஜய் வாய்திறந்துவிட்டார்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை  விஜய் இயக்கும் தன்னுடைய புதிய படமான தலைவா பணிகளைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by

Leave a comment