றிசானாவின் மரண தண்டனை தொடர்பாக ஊடகங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

book[2]றிசானா நபீக் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கடந்த 9.1.2013 அன்றிலிருந்து இன்று வரை ஊடகங்களில் வெளிவந்த றிசானாவின் மரண தண்டனை தொடர்பான கட்டுரைகளை ஒன்று சோர்த்து அதை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் நடவடிக்கையில் காத்தான்குடி மீடியா போரம் ஈடுபட்டு வருகின்றது.

 இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை உள்ளடக்கியதாக அந்த புத்தகம் வெளி வரவுள்ளது.

 கட்டுரை எழுதியவரின் பெயர் மற்றும் கட்டுரை வெளியிட்ட ஊடகம் அவற்றையும் குறிப்பிட்டே அதை தொகுத்து அந்த புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

 இந்த புத்தத்தின் மூலம் கிடைக்கப்பெறும்  பணம் றிசானாவின் குடும்பத்திற்கு வழங்குவதெனவும் காத்தான்குடி மீடியா போரத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா தெரிவித்தார்.

 இந்த புத்தகத்தை அச்சிடும்  நடவடிக்கைகள் இடம் பெற்றுவருகின்றன. அதே போன்று இந்த புத்தக்கதுடன் றிசானா தொடர்பான இறு வெட்டு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

 இதை வியாபார நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளும் எந்த நோக்கமும் எமக்கில்லை என காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment