– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள், முஸ்லிம் சிரேஸ்ட, இளம் ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதி அட்டை வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட இளம் ஊடகவியலாளர் அமைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரப்புக்வெல, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, தனியார் போக்குவரத்து அமைச்சர், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அமைச்சர் பஸீர் ஸேகுதாவூத், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லாஹ், மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூரத்தி முரளிதன், முன்னாள் முதலமைச்சரும், ஜனாதபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள், ஆகியோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலவச பஸ் பாஸ் விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இளம் ஊடகவியலாளர் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில்; வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் விடயம் தொடர்பில் பல தடவைகள் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தனியார் போக்குவரத்து அமைச்சர், முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் மாவட்டதைப் பிரநித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளிடம் கதைத்துள்ள போதும் இதுவரையில் எவ்வித பஸ் பாஸ் அனுமதி வழங்கப்படாமல் கிழக்கு மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடணடியாக நடவடிக்கை எடுக்கவெண்டுமென அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்க மாகாணத்தில் திருகோணாமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் இலவச பஸ் பாஸ் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு –அப்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தமட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, கல்குடா, வவூணதீவு, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, அண்ணமலை, பெரியபோரதீவு, துறைநீலாவணை, அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அக்கரைபற்று, மாளிகைக்காடு, திருக்கோயில், பொத்துவில், ஒலுவில், அட்டாளைச்சேனை, மருதமுனை, பாண்டிருப்பு, இறக்காமம் போன்ற இரண்டு மாவட்டங்களின் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment