அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பில் எந்தச் சவாலுக்கும் முகங்கொடுக்க இலங்கை தயாராக இருக்கின்றதென அமைச்சரைவப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று பிற்பகல் தகவல் ஊடகத்றை அமைச்சில் நடைபெற்றபோதெ அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:
மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு தகுந்த விளக்கமளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் குழுவொன்று ஜெனீவா செல்லும்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உட்பட வெளிவிவகார அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் அங்கு சென்று விளக்கமளிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment