தேசிய இஸ்லாமிய கண்காட்சி தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

By: FM. Farhan
By: FM. Farhan

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படவுள்ள தேசியமட்ட இலங்கை முஸ்லிம்களின் தொன்மை, வரலாறு, வாழ்வியல், உள்ளிட்ட கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் கிழக்கின் முதலாவது கலாசாரக் கண்காட்சி ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள இவ்வேளையில் இதை திறன்பட நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் தலைமையில் காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

 இக்கலந்துரையாடல் நிகழ்வில் காத்தான்குடி உதவிப்பிரதேச செயலாளர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், புதிய காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் சுல்மி, காத்தான்குடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் குணரட்ணம், காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளர் ஜெஸூ ரெஜினோல்ட், காத்தான்குடி மின்பொறியியலாளர் நௌபல், கிராம சேவையாளர்களுக்கான நிரவாக உத்தியோகத்தர் கோமலேஸவரன், காத்தான்குடி பிரதேச கலாசார அபிவிருத்தி உதவியாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பசீர் மதனி, கலாசார உத்தியோகத்தர் ஜவாஹிர் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்து மூன்று நாள் நடைபெறவுள்ள இக்கண்காட்சி வெள்ளிக்கிழமை பெண்களுக்கும் ஏனைய இரு நாட்களில் ஆண்களுக்குமாக நடைபெறவுள்ளதுடன் இதற்கான நுழைவுச்சீட்டு 10ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஒழுங்கமைப்பு வேலைகளை காத்தான்குடி சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment