-OIT
விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் படுவார்கள் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு மேல் முறையீடு செய்வதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லீம்கள் நன்றி கடன் படுவார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதித்து சட்டம் ஒழுங்கை பேணி காப்பவர்கள் முஸ்லிம்கள். இப்படத்தை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Leave a comment