இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியவை இலங்கை கிரிக்கெட் அமைப்பின் தேர்வுக்குழு தலைவராக நியமித்ததில் எவ்வித பிழையும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசியல்வாதியான சனத் ஜெயசூரியவை இப்பதவிக்கு நியமித்தது தவறு என்று சுட்டிக்காட்டிய போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சனத் ஜெயசூரிய என்பவர் ஒரு அரசியல் வாதியாக இன்று இருந்தாலும் அவர் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஒரு விளம்பர இலட்சினையாக இருக்கிறார். ஆகவே, அவரை தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்க சம்பந்தப்பட்டவர்கள் எடுத்தது சரியான முடிவு என்று ஜனாதிபதி சொன்னார்.
அது போன்று அர்ஜுன ரணதுங்கவின் அரசியல் எதுவாக இருந்தாலும் அவரும் ஒரு சிறந்த ஆட்டக்காரர். அவரைக்கூட இப்பதவிக்கு நியமிக்கலாம்.
“எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது. ஆனால், நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். என்னை நியமித்தால் நான் எவ்விதம் நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரர்களை இலங்கை அணிக்கு தெரிவு செய்வேன்”.
“மேர்வின் சில்வாவை கிரிக்கெட் தெரிவிக்குழுவின் தலைவராக நியமித்திருந்தால் அது தவறு. ஆனால், சனத் ஜெயசூரிய விடயத்தில் எவரும் தவறிழைக்கவில்லை” என்று ஜனாதிபதி கூறினார்.
-தினகரன்
Leave a comment