காத்தான்குடியில் 08 டெங்கு நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்த புகைவிசிறல் நடவடிக்கை

– பழுலுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

டெங்குநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் துரித நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி நகர சபையும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து உயிர்கொல்லி டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்காக வீடுகளுக்கு புகை விசிறல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளாக அட்டவணை அடிப்படையில் இந்த புகைவிசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நகர சபை தொழிலாலிகளினால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை காத்தான்குடியிலுள்ள வீடுகளையும் அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுப்புற சூழல்கள் வெற்றுக்காணிகள் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பரிசீலனை செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடியில் இதுவரை 08 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment