கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மாணவன் நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்பு!

– பழுளுல்லாஹ் பர்ஹான்

Kallady
BY: FM. Farhan

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி  கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று  காணாமல் போன மட்டக்களப்பு கல்லடி  சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந், மட்டக்களப்பு மஞ்சன்தொடுவாய் கடற்கரை நீர் ஓடைக்கு அருகாமையிலுள்ள நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இம்மாணவனின் சடலத்தை பார்வையிட பெருமளவிலான பொது மக்கள், இளைஞர்கள், குடும்ப உறவிணர்கள, மாணவர்கள்  வந்த வண்ணம் உள்ளதாகவும் இம்மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் ஜெகநாதன் டிலுஷ்காந்தின் குடும்பத்துக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்லடி சாந்தி தியேட்டருக்கு அருகாமையில் வசிக்கும் குறித்த மாணவன் இம்முறை 2012ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவனின் குடும்பத்தினர் அழுது புழம்பிய காட்சிகள் எமது கெமராக்களில் பதிவாகின.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment