கமலை அமைதி காக்கச் சொன்ன ரஜினி

-OIT

kamal-rajani[1]

உணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் – இயக்குநர் அமீர்

இக்கட்டான சூழலில் உள்ள தனது 40 ஆண்டுகால நண்பன் கமல் ஹாஸனுடன் போனில் பேசிய ரஜினி, அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார்.

ரஜினி – கமல் இருவரும் திரையில் மரியாதைக்குரிய போட்டியாளர்களாகவும், நிஜத்தில் நட்புக்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

உழைப்பாளி சமயத்தில் ரஜினிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது கமல் உதவிக்கு வந்தார். அதே போல கமலுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் முதல் குரல் கொடுப்பவராகத் திகழ்கிறார் சூப்பர் ஸ்டார்.

இந்த விஸ்வரூபம் விவகாரத்திலேயே கூட, கமலை அரசும் இஸ்லாமிய அமைப்புகளும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது முதல் அறிக்கை வெளியிட்டவர் ரஜினிதான். அதன்பிறகுதான் பாரதிராஜா போன்றவர்கள் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், பிரச்சினை மிகத் தீவிரமடைந்து கமல் இந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறேன் என்று மனம் வெதும்பி அறிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த ரஜினி, கமலுடன் உடனடியாக போனில் பேசினார்.

கமல் வைத்த பிரஸ்மீட்டுக்கே நேரில் வருவதாக ரஜினி கூறியுள்ளார். ஆனால் வேண்டாம், பிரஸ் மீட் முடிந்ததும் சந்திக்கலாம் என்று கமல் கூறியதால் வரவில்லை. இன்று இரவு அவர் கமலைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை விட்டு கமல் வெளியேறுவேன் என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட ரஜினி, “அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட வேண்டாம். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். பொறுமையாக இருங்கள்,” என்று அறிவுறுத்தினாராம்.

ஏற்கெனவே கமலை இக்கட்டிலிருந்து மீட்க ரஜினி வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

கமல் வீட்டுக்கு விரைந்த நட்சத்திரங்கள்

ரஜினி தவிர, பாரதிராஜா, வைரமுத்து, சரத்குமார், ராதிகா, பிரகாஷ் ராஜ், சிம்பு, சினேகா, பிரசன்னா என பலரும் கமலை நேரில் சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் விஸ்வரூபம் விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர் நீதிமன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கோவையில் பழைய இரும்புக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வரும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

உணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் – இயக்குநர் அமீர்

30-ameer42-300[1]இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த விஷயத்தில் பொறுகை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

தமிழகத்தில் நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் அது காலத்தால் மறைக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும். இந்த சூழ்நிலையில் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதசார்புள்ள மாநிலமாக கருதக்கூடாது. நான் உள்பட தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாகவும், இந்தியாவை மதசார்பற்ற நாடாகவும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் அவசரப்பட்டு எந்த விதமான முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், ஒரு படைப்பாளியாக சக மனிதனாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் காப்பதுடன் இந்த பிரச்சனை மேலும் உயர் பெறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Published by

Leave a comment