கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை!- தமிழக அரசு

You Tube இல்  வெளியான விஸ்வரூபம்… உடனடியாக தடை செய்த கமல் தரப்பு

29-kamal-viswaroopam2-300[1]-OIT

விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே விற்றுவிட்ட கமல் ஹாஸனுக்கு, அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இல்லை என்று தமிழக அரசு அதிரடி வாதத்தை நீதிமன்றத்தில் வைத்துள்ளது.

இந்தப் படம் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாகக் கூறி தமிழக அரசிடம் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுபட்டு குரல் கொடுக்க, படத்துக்கு 2 வார காலம் தடை விதித்ததது தமிழக அரசு. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களும் கடிதம் கொடுத்துள்ளனர் அரசுக்கு.

இவற்றை எதிர்த்து இரு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார் கமல். இந்த வழக்குகளின் விசாரணை மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. இடையில் படத்தையும் நீதிபதிகள் குழு பார்த்து முடித்தது.

இந்தப் படத்துக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது…? ஏன் விலக்கக் கூடாது? என்று அரசுத் தரப்பும் கமல் தரப்பும் தீவிரமாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாதம் செய்து வருகின்றன.

இதில் அரசுத் தரப்பு வைத்துள்ள ஒரு வாதம் மிக முக்கியாமானது. “விஸ்வரூபம் என்ற product-ஐ கமல்ஹாஸன் வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் எந்த உரிமையும் இப்போது அவரிடம் இல்லை. எனவே இந்தப் படத்தின் தடைக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை கமல்ஹாஸனுக்கு இல்லை.

மேலும் இந்தப் படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்தத் தடையை விதித்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

You Tube இல்  வெளியான விஸ்வரூபம்… உடனடியாக தடை செய்த கமல் தரப்பு

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று காலை திடீரென யுட்யூப் வீடியோ தளத்தில் வெளியானது.

அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த வீடியோ இடம்பெற்ற கணக்கு முடக்கப்பட்டது.

விஸ்வரூபம் படம் சில வெளிநாடுகளில் வெளியான இரண்டாம் நாள் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, படம் வெளியான இரண்டாவது வாரமே ஒரிஜினல் டி.வி.டி. களே வந்துவிடும் நிலை உள்ளது.

இந்த சூழலில் தமிழகம் – புதுவையில் முழு தடையும், மற்ற மாநிலங்களில் பகுதி தடையும் விதிக்கப்பட்டுள்ள விஸ்வரூபத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து திருட்டு டிவிடிகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையில் மிக சுலபத்தில் ரூ 25-க்கே டி. வி. டி. கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், விஸ்வரூபம் முழுப் படத்தையும் சிலர் இன்று யுட்யூப் தளத்தில் பதிவேற்றிவிட்டனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

யூ டியூபில் விஸ்வரூபத்தை வெளியிட்டது யார் எனவும், அதை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் எனவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

14 காட்சிகளை நீக்கிய பிறகே சான்றிதழ் கொடுத்தோம்

விஸ்வரூரபம் படத்தின் காட்சி அமைப்புகளுக்கான ஆதார அடிப்படையில்தான் சான்றிதழ் கொடுத்தோம். படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே சான்று அளிக்கப்பட்டது என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விஸ்வரூபம் தடை நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்திய தணிக்கை வாரியமும் தனது தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், மொத்தம் 14 காட்சிகளை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டோம். அதன்படி நீக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய 1.8 நிமிட நேர காட்சி ஒன்றும் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

காட்சி அமைப்புகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் படத்திற்கான சான்றிதழை அளித்தோம். முற்றிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டே சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Published by

Leave a comment