பொதுபல சேனா அமைப்பிடம் விளக்கம் கோரினார் ஜனாதிபதி

bothuநாட்டில் தற்போது எழுந்துள்ள இனவாதப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில்- மேற்படி அமைப்பின் அங்கத்தவர்களான விமலஜோதி தேரர்- விதாரன்தெனியே நந்த தேரர்- கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோருடன் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த- பசில் ராஜபக்ஷ- தினேஸ் குணவர்தன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் விரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

bodubala01[1]இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராக நாம் போராடவில்லை. பௌத்த தர்மத்துக்கு எதிராகச் செயற்படும் சில முஸ்லிம் குழுக்களுக்கு எதிராகவே நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்’ என்று பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment