-MJ
இஸ்ரேலிய பிரிமியர் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது இஸ்ரேலில் உள்ள முக்கிய அணிகளின் மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன.
உலக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஐரோப்பா உதைப்பந்தாட்ட லீக் போட்டிகளைப் போன்று இஸ்ரேலிலும் இச்சுற்றுப்போட்டிகள் வருடாவருடம் நடைபெறுவது வழக்கம்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஒரு போட்டியின் போது ‘பெய்டர் ஜரூஸலம்’ கழகத்தின் இரசிகர்கள் எதிர்ப்பு பதாதைகளைத் தாங்கியவாறு மைதானத்தில் தங்களது எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் வெளிக்காட்டி இருந்தனர். ‘பெய்டர் ஜரூஸலம்’ எனும் கழகத்திற்கு செச்னிய நாட்டின் பிரபலமான இரு முஸ்லிம் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
அரபு எதிர்ப்பு வாதிகள் இந்த கண்டனத்தைத் தெரிவித்ததாக இஸ்ரேலிய செய்தி ஊடகம் தெரிவிக்கின்றது.
அரபு எதிர்ப்பு இரசிகர்கள் இஸ்ரேலில் இருப்பதால் இஸ்ரேல் கழகங்கள் ஒருபோதும் அரபு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில்லை.
2005ல் இப்றாஹீம் நடல்லா எனும் நைஜீரிய முஸ்லிம் வீரர் குறித்த கழகத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தார். எனினும் மைதானத்தில் கால்பதிப்பதற்கு முன்னர், இரசிகர்களின் எதிர்ப்பால் இஸ்ரேலைவிட்டு வெளியேறி இருந்ததும் உலகம் அறிந்த விடயம்
இவ்வாறான இனத்துவேசங்கள் விளையாட்டில் நுழைந்திருப்தை இஸ்ரேலிய சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
‘இந்த துவேச எதிர்ப்பு குறித்து தான்அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், இக்கழகத்தில் யூதர்கள் மாத்திரமே விளையாட வேண்டும் என்ற துவேசத்திற்கு தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும்’ இஸ்ரேலிய உதவிப் பிரதமர் ‘மோஸே யாலூன்’ கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment