சீரற்ற காலநிலையால் மட்டு அம்பாறை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

– பழுளுல்லாஹ் பர்ஹான்

Farhan1மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுமார் இரு வாரங்களாக கடலுக்குச் செல்லாமல் தமது சீவனோபாயமாக கொண்டுள்ள கடற்றொழில் செய்ய முடியாமையினால் மீனவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூநொச்சிமுனை பாலமுனை கிரான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் பல அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் கடலில் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையே மீனவர்கள் கடலுக்குச் செல்லாமைக்கான காரணியாகும் என புதிய காத்தான்குடி மீனவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாமையினால் கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மீன்களின் விலை  வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment